ஒரு நாட்டின் பொதுவிலை மட்டம் தொடர்ச்சியாக அதிகரிப்பதே பணவீக்கம் எனப்படும். ஒரு நாட்டில் பணவீக்கநிலை காணப்படுமாயின் பொது மக்கள் கையிலுள்ள பண அளவு அதிகமாகவும் சந்தையிலுள்ள பொருள்கள் சேவைகளின் அளவு குறைவாகவும் இருக்கும் சில சந்தர்ப்பங்களில் பொதுவிலை மட்டங்கள் அதிகரிக்காதபொதிலும் நாட்டில் பணவீக்கநிலை காணப்படும். இதனை அமுக்கப்பட்ட பண வீக்கம் என குறிப்பிடப்படுகின்றது. இத்தகைய நிலை காணப்படுவதற்கு அரசாங்கம் விலைகளை கட்டுப்படுத்தி வைப்பதே காரணமாகும்.
Thursday, June 13, 2013
பண நிரம்பல்
பண நிரம்பல் என்பது புழக்கத்திலுள்ள தாள், உலோக நாணயங்கபொதுமக்கள் பெயரில் வணிக வங்கிகளில் உள்ள பணத்தின் அளவுமே பண நிரம்பல் என அழைக்கப்படுகின்றது இப்பண நிரம்பல் இரு வகைப்படுத்தி நோக்கப் படுகின்றது.
- ஒடுங்கிய பண நிரம்பல்
- விரிந்த பண நிரம்பல்
ஒடுங்கிய பண நிரம்பலுள் புழக்கத்திலுள்ள தாள், உலோக நாணயங்களும் பொது மக்கள் பெயரிலான கேள்வி வைப்புக்களும் உள்ளடக்கப்படும்.
விரிந்த பண நிரம்பலுள் புழக்கத்திலுள்ள தாள் உலோக நாணயங்களும் பொது மக்கள் பெயரிலான கேள்வி வைப்புக்கள், நிலையான வைப்புக்கள், சேமிப்பு வைப்புக்கள் என்பனவும் உள்ளடக்கப்படும். தற்போது சேமிப்பு வைப்புக்களும் நிலையான வைப்புக்களும் குறுங்கால முன்னறிவித்தலுடன் அல்லது முன்னறிவித்தல் இன்றியே பணமாக மாற்றப்பட முடியும் என்பதனால் அவையும் பணநிரம்பலுடன் சேர்க்கப்படுகின்றன.
Tuesday, June 11, 2013
வணிக வங்கிகளின் கடனாக்கம் அல்லது பணவாக்கம்
வணிகவங்கிகள் பணத்தை வெளியீடு செய்ய முடியாதவிடினும் அவை பணவாக்கம் செய்வதன் மூலம் பண நிரம்பலில் செல்வாக்குச் செலுத்துகின்றன். ஓர் வங்கி கடன்களை வழங்குவதனூடாக பொது மக்கள் பெயரிலான கேள்வி வைப்புக்களை அதிகரிப்பதன் மூலம் பணவாக்கத்தை செய்கின்றன. வங்கிகளின் ஒதுக்க வீதத்தின் அளவைப் பொறுத்து பணவாக்க சக்தியும் நிர்ணயிக்கப்படும். ஒதுக்கு வீதம் குறைவாக இருந்தால் பண ஆக்க சக்தி அதிகமாகவும் ஒதுக்கு வீதங்கள் உயர்வாக இருந்தால் பணவாக்க சக்தி குறைவாகவும் காணப்படும்.
ஆயினும் பொது மக்கள் வங்கிப் பழக்கவழக்கம் உடையவர்களாகவும் ,காசோலை மூலமான கொடுக்கல் வாங்கல்கள் பிரபல்யம் பெற்று இருக்கும் ஒரு நாட்டில் அதிக வணிக வங்கிகள் செயற்படும் போது பணவாக்கம் நிகழ முடியும். இதற்கு மாறான நிலைமைகள் காணப்படுமாயின் பணவாக்கம் ஏற்படவோ அதன்மூலம் பணநிரம்பல் ஏற்படவோ பணவீக்க நிலை தோன்றவோ வாய்ப்பில்லை.
வணிக வங்கிகளின் தொழிற்பாடுகள்
01. வாடிக்கையாளரிடமிருந்து வைப்புக்களை ஏற்றல். (கேள்வி வைப்பு,
நிலையான வைப்பு, சேமிப்பு வைப்பு)
02. வாடிக்கையாளரின் பிரதிகர்த்தாவாக தொழிற்படல்.
03. அன்னிய செலவாணிக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடல்.
04. வாடிக்கையாளர்களுக்கு கடன் வசதிகளையும், குத்தகைக் கடன்
வசதிகளையும் கொடுத்தல்.
05. நகை அடகு பிடித்தல்.
06. உண்டியல்களை கழிவுகளுக்க மாற்றிக் கொடுத்தல்.
07. பிரயாணிகள் காசோலைகளை வழங்குதலும், மாற்றிக் கொடுத்தலும்.
08. நாணயக் கடிதங்கள் வழங்குதல்.
09. அன்னியச் செலாவணி நாணயக்கணக்குகளை செயற்படுத்தல்.
10. சர்வதேச கொடுக்கல் வாங்கல்களுக்கு உதவுதல்.
11. பெறுமதியான சொத்துக்களை பாதுகாத்து வழங்குதல் (பாதுகாப்பு அறை
வசதி)
12. கடன் அட்டை முறைகளை செயற்படுத்தல்.
13. நம்பிக்கையான வாடிக்கையாளர் சார்பாக உத்தரவாதியாக செயற்படுதல்.
14. பிணைப் பத்திரங்கள் அலகுகள் என்பவற்றை வாங்குதலும் விற்றலும்.
15. பங்குகளை ஒப்புறுதி செய்தல்.
வணிக வங்கிகள்
வாடிக்கையாளரிடமிருந்து
நடைமுறை வைப்புக்களையும், சேமிப்பு, நிலையான வைப்பக்களையும்
ஏற்றக்கொள்வதுடன் வாடிக்கையாளர் நடைமுறை கணக்கில் உள்ள தொகையை காசோலை
எழுதவதன் மூலம் மீளப் பெற்றுக்கொள்ளம் உரிமையை வழங்கும் வங்கிகளே வணிக
வங்கிகளாகும்.
இலங்கையில்
1988 ஆம் ஆண்டில் 30 ஆம் இலக்க வங்கி சட்டத்தின் கீழ் வணிக வங்கிகள்
உருவாக்கப்படுகின்றன. அத்துடன் அரசவங்கிகளாகவும், தனியார் வங்கிகளாகவும்
இவற்றை ஆரம்பிக்க முடியும்.
இலங்கையில் செயற்படும் அரச வணிக வங்கிகள்
Eg:-இலங்கை வங்கி, மக்கள் வங்கி
இலங்கையில் செயற்படும் தனியார் வணிக வங்கிகள்
Eg:-ஹட்டன் நஷனல் வங்கி, கொமர்ஷல் வங்கி, செலான் வங்கி, சம்பத் வங்கி
இலங்கையில் செயற்படும் அந்நிய வணிக வங்கிகள்
Eg:-வரையறுத்த ஹொங்கொங் வங்கி(HSBC), ஓமான் வங்கி, Stranded Charted Bank
Subscribe to:
Posts (Atom)